மாறிவரும் உலக சூழலில் உள்ளூர்மயமாக்கலின் தொழில்துறை நிபுணர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த ஒரு பார்வை இங்கே: : உள்ளூர்மயமாகக்கலின் தொழில் நிபுணர்களை நிதி தொடர்பாகவும் மனதளவிலும் AI எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்
ஆசிரியர்: சஞ்சை ஷா
அனைவரும் இப்போது AI குறித்தே பேசுகிறார்கள், அனைத்து தொழில்துறைகளிலும் அதன் தாக்கம் விரைவாக பரவிவருகிறது. இதில் உள்ளூர்மயமாக்கல் துறையும் விதிவிலக்கல்ல.- ஆனால் அது முன்னேற்றத்துக்கான ஒரு வழியாக இல்லை. நீங்கள் ஒரு மொழிபெயர்ப்பாளராக அல்லது உள்ளூர்மயமாக்கலின் நிபுணராக இருந்தால் –அதன் தாக்கத்தை நீங்கள் ஏற்கனவே உணர்ந்திருக்கக் கூடும். AIநிதி தொடர்பாகவும் மனதளவிலும் தீவிரமானசவால்களை உருவாக்கிவருகிறது.
AI அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து உள்ளூர்மயமாகக்கல் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாக மாறிவிட்டது. AI மூலம் யாராலும் ஒரு மொழிபெயர்ப்பு நிபுணராக விளங்க முடியும் என்று பெரும்பாலானோர் நம்புகிறார்கள். ஆனால் அது உண்மைக்கு வெகு தொலைவில் இருக்கிறது.
மின்னஞ்சல்களுக்கான கூடுதல் வரிகள்
எங்கள் CMD சஞ்சை ஷா அவர்களின் நுண்ணறிவுடன் கூடிய மொழிபெயர்ப்பு (உள்ளூர்மயமாக்கல்) தொடர்பான கட்டுரையை வாசியுங்கள். பன்மொழி நிபுணர்கள் உள்ளடக்கங்களை வழங்க எவ்வளவு கடினமாக உழைக்கிறார்கள் என்பதையும் அதே சமயம் அவர்கள் உழைப்பு அறியப்படாமல் அவர்கள் அங்கீகாரிக்கப்படாத ஹீரோக்களாக இருக்கும் நிலை குறித்தும் அறிந்து கொள்ளுங்கள். AI வேரூன்றி வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் எந்த ஒரு தவறும் இழைக்காத அவர்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
நம்பகத் தன்மை இல்லாமை மற்றும் குற்றச்சாட்டுகள் மேலெழுந்துவரும் சூழல்
என் சொந்த அனுபவத்திலிருந்தும் எனது சக மொழிபெயர்பாளர்களின் அனுபவத்திலிருந்தும் நான் கூறுவது என்னவென்றால், வார்த்தைகள் மற்றும் எழுத்தின் மீது கொண்ட ஒரு ஆழமான மற்றும் தீவிரமான பற்றுதலின் காரணமாக மொழியில் நிபுணத்துவம் பெறவும் அதில் எங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் நாங்கள் பல வருடங்களை செலவழித்திருக்கிறோம். இந்தியாவில் மொழிபெயர்ப்புப் பணி முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகளவிலான வருமானத்தை ஈட்டித் தரும் ஒன்றாக விளங்கிய காரணத்தால், அதன் மீதான பற்று எங்களை மென் மேலும் இயக்கி முன்னேறச் செய்தது. இருப்பினும் தற்போது AI அறிமுகத்தின் மூலம் மொழிபெயர்பாளர்கள் வெறும் ஒரு இயந்திரத்தை இயக்கும் ஒரு நபராக கருதப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள்.
இதில் மேலும் அதிக மன உளைச்சலைத் தருவது என்னவென்றால், “ இது மனித செயல்பாடாகத் தெரியவில்லை” என்று கூறி, மொழிபெயர்பாளர்கள் தங்களது பணியில் AI ஐ பயன்படுத்துவதாக வாடிக்கையாளர்கள் எந்த ஒரு ஆதாரமுமின்றி குற்றம்சாட்டுவதுதான். அத்தகைய குற்றச்சாட்டுக்கள் உண்மையில்லை என்பதோடு அது ஆழ்ந்த மனச்சோர்வை அளிக்கும் ஒன்றாகவும் இருக்கிறது. மொழிமாற்றம் செய்யப்படும் அந்த மொழிக்கு உயிரூட்டுவதை உறுதி செய்யும் வகையில் தங்கள் நேரத்தையும் உழைப்பையும் மொழிபெயர்ப்பாளர்கள் செலவிட்டு வருகிறார்கள். ஆனால் AI ஐ பயன்படுத்துவதாக ஒரு பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்படும் போது கன்னத்தில் அறையப்பட்டதுபோல்அவர்கள் நிலை குலைந்து போகிறார்கள்.
AI-//எதிர்// மனித மொழிபெயர்ப்பு: ஒரு தவறான ஒப்பீடு
AI மொழிபெயர்க்கும் திறன் கொண்டது என்பது உண்மைதான், மேலு அது பல மொழிகளில் மொழிபெயர்க்கும் திறன்படைத்ததும் கூட; மொழிபெயர்ப்பை மேலும் செம்மைப்படுத்த மொழிஅகராதி அல்லது தேடு பொறி போன்ற ஒரு கருவியாக AI ஐ நானும் பயன்படுத்துகிறேன். ஆனால் AI எனது எனக்குள்ள ஆக்கச் சிந்தனையை கொண்டிருக்கும் என்று கருதுவது நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்றாகும் மற்றும் அது எந்த ஒரு காலத்திலும் நிகழப்போவதே இல்லை. எந்த ஒரு அலங்காரமுமில்லாத ஒரு அடிப்படையான மொழிபெயர்ப்பை AI வழங்கும் ஆனால் மிக சிக்கலான மொழிகள் என்று வரும்போது அதனால் சிறப்பாக செயல்படமுடியாது போகிறது. உதாரணமாக ஆங்கிலத்திலிருந்து ஹிந்தி, குஜராத்தி, அல்லது மராட்டிய மொழிகளுக்கு மொழி மாற்றம் செய்ய AI ஐ பயன்படுத்தினால் அதன் முடிவுகள் சிரிப்பை வரவழைப்பதாக இருக்கும்.
ஒரு முறை காலத்தை சேமிக்கும் ஒரு முயற்சியாக நான் ஆங்கிலத்திலிருந்து குஜராத்தி மொழிக்கு மொழிமாற்றம் செய்ய AI உதவியை நாடினேன். அதன் விளைவு மிகவும் அபத்தமாக இருந்தது. நான் அதை முற்றிலுமாக நிராகரித்துவிட்டேன். AI இன் தவறுகளை சரிசெய்வதற்கு செலவிடும் நேரம் அதை முதலிலிருந்தே மொழிபெயர்ப்பு செய்வதற்கான நேரத்தை விட அதிக நேரம் பிடிக்கும்! , குறிப்பாக நமது மொழிகளை போன்ற சிக்கல்கள் நிறைந்த மொழிகளை மொழிமாற்றம் செய்வதில் மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஒரு மாற்றாக AI அமைவதற்கான வாய்ப்பே இல்லை என்று எனக்கு இந்த நிகழ்வு உணர்த்தியது.
இந்திய மொழிகளைக் கையாள்வதில் தடுமாறும் AI இன் போராட்டம்
AI தெளிவாக ஆங்கில மொழியை சார்ந்து உள்ளது. இந்திய மொழிகள் என்று வரும்போது அதன் மொழி இலக்கணம் கண்ணிவெடிகளின் ஒரு சுரங்கம் என்பதால் அதைக் கையாளத் திணறுகிறது. ஹிந்தி,குஜராத்தி மற்றும் மராத்திய மொழிகளில் – சிறு சிறு திருத்தங்களால் சரி செய்யமுடியாத- மோசமான தவறுகளை AI விளைவிப்பதை நான் கண்டிருக்கிறேன். அத்தகைய மொழிபெயர்ப்புக்களை மீண்டும் தொடக்கத்திலிருந்து மேற்கொள்ளவேண்டிய தேவை ஏற்படும்.
AI க்கு இருக்கக் கூடிய வரையறைகள் காரணமாக தரம் குறைந்த முடிவுகளையே அதனால் வழங்கமுடியும் என்ற நிலை இருக்கும் போது, ஒரு தொழில்முறை மொழிபெயர்ப்பாளருக்கு தனது மொழிபெயர்ப்பு தன் சொந்த சிந்தனையில் உருவானது என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எந்த விதமான மனஉளைச்சலை உருவாக்கும் என்பது குறித்து சிந்தித்துப் பாருங்கள். தனது பணியை நியாயப்படுத்துவதற்கான இந்த தொடர்ந்த இடைவிடாத முயற்சிகள் ஒருவரது நேரத்தையும் சக்தியையும் வீணாடிக்கச் செய்துவிடுகிறது.
தனிப்பட்ட விளைவுகள் : மொழிபெயற்பாளர்கள் தங்களது வேலை மற்றும் மன எழுச்சி இரண்டையுமே இழக்க நேரிடுகிறது.
இதில் மிகப்பெரிய பிரச்சினையாக விளங்குவது AI இன் வரையறைகள் தொடர்பானவை மட்டுமல்ல. அத்துடன் சேர்த்து பரவலாக மேம்பாட்டுவரும் AI இன் இருப்பு மற்றும் பயன்பாடு தனிப்பட்ட முறையில் மொழிபெயர்ப்பாளர்களுக்கு மேலும் அதிக பாதிப்பை விளைவித்துவருகிறது. தங்கள் மொழித்திறனை சீரமைத்து மேம்படுத்திக்கொள்ள பல ஆண்டுகளாக உழைத்து வந்த அனுபவம் வாய்ந்த மொழிபெயர்ப்பாளர்கள் தற்போது தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும் மற்றும் புதிய வேலைகளைப் பெறுவதற்கும் போராடிவருகின்றனர். தற்போது AI ஆல் அனைத்தையும் நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்று வாடிக்கையாளர்கள் எண்ணத் தொடங்கிவிட்டார்கள் அதன் மூலம் தொழில்முறை சேவைகளை எந்த ஒரு மனித மதிப்பும் அற்ற பழுது நீக்கும் ஒரு பணியாக மாற்றிவிட்டார்கள்?
இதன் மோசமான பகுதி? மொழிபெயர்பாளர்கள் AI ஐ பயன்படுத்தாத நிலையிலும் விலைகளைக் குறைக்கும் நோக்கத்தில் அவ்வாறு பயன்படுத்தியதாக, பெரும்பாலானோர் பொய்யான குற்றச்சாட்டுக்கு ஆளாகிறார்கள், இது– வாடிக்கையாளர்களை இழப்பதோடு வருமானத்தையும் இழக்க இட்டுச் செல்லும் என்பதால் – மொழிபெயர்ப்பாளர்களுக்கு நிதி தொடர்பான தாக்கத்தை விளைவிப்பத்தோடு மட்டுமல்லாமல் மன உளைச்சலையும் விளைவிக்கும். யூகத்தின் அடிப்படையிலான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் உங்களின் கடுமையான உழைப்பு தகுதி குறைவானதாக கருதப்படும் போது அது உங்களுக்கு மனச் சோர்வை அளிக்கக் கூடும்.
மொழிபெயர்ப்பாளர்களில் பலர் தங்களது தொழிலை மாற்றிக்கொள்ளும் எண்ணத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்கனவே வருமானம் குறைவாக வழங்கப்படுவதும் அவர்களின் வேலை தகுதி குறைவாக மதிப்பிடப்படுவதும் பலவருடங்களாக தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில் இப்போது அது நம்பகத் தன்மையையும் இழந்துவிட்டது. மொழிபெயர்ப்பு எப்போதுமே ஒரு அங்கீகரிக்கப்படாத பணியாகவே இருந்துவந்த நிலையில் எந்த ஒரு AI தொழில்நுட்பத்தாலும் கையாளப்படக் கூடிய ஒன்றாக இப்போது அது கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறது.
இருபுறமும் கூரான கத்தி போன்ற இந்திய மொழிகள்:
இந்தியாவில் மொழிபெயர்ப்பு என்பது அடுக்கடுக்கான சிக்கல்கள் நிறைந்த ஒன்றாக விளங்குகிறது. நமது மொழிகள் தனித்துவான அடிக்கடி இருவேறுபட்ட முறைகளில் எழுதப்பட்டுவருகின்றன. இதில் முதலாவதாக இருப்பது சுத்தமான உள்ளூர் மொழி எழுத்து, அதில் பெரும்பாலான வார்த்தைகள் அசல் உள்ளூர் மொழியிலிருந்து வருகின்றன. இரண்டாவது கலப்பு மொழி, அதில் பெரும்பாலான வார்த்தைகள் ஆங்கிலத்தில் இருந்து பயன்படுத்தப்படுகின்றன.
மொழிபெயர்ப்பு பணியை வழங்கும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான மொழிப் பயன்பாடு குறித்து அரிதாகவே குறிப்பிட்டு சொல்கிறார்கள்.. அதே சமயம் நிறைவடைந்த மொழிபெயர்ப்பை பெற்றபிறகு, அவர்களது கண்காணிப்பு கருவிகள் முழு வீச்சில் செயல்படத் தொடங்கிவிடுகின்றன. மொழிபெயர்ப்பாளர்கள் கடைப்பிடித்த வழிமுறைகளை கருத்தில் கொள்ளாமல் அவர்கள் மீது பழி சுமத்தப்படுகிறது.
ஒரு மொழிபெயர்ப்பாளர் அசல் மொழியின் மீது சார்ந்து செயல்பட்ட நிலையில் இந்தியாவில் அனைவரும் அந்த வார்த்தைக்கு பதிலாக ஆங்கிலத்தையே பயன்படுத்துகிறார்கள் என்பது “உனக்குத் தெரியாதா? [“சம்ஜா மேய்ன் நஹி ஆத்தா க்யா? (“Samajh mein nahin aata kya?)]! அதை ஏன் நீ மொழிபெயர்த்தாய்?” என்ற வார்த்தையை கேட்க நேரிடும். ஒருவேளை அந்த மொழிபெயர்ப்பாளர் ஆங்கில வார்த்தையையே பயன்படுத்தியிருந்தால், உள்ளூர் மொழியை ஆங்கிலப்படுத்த முயற்சி செய்வதாக குற்றம் சாட்டப்பட்டிருப்பார். இது வெற்றியே காண முடியாத இரண்டும் கெட்டான் நிலையாக இருக்கிறது.
மனித ஆக்கச் சிந்தனை நிபுணத்துவத்தை AI ஆல் மாற்றியமைக்க முடியாது.
இந்த விஷயத்தில் நாம் மிகவும் தெளிவாக இருப்போம்: AI ஆல் இப்போது உடனடியாக நல்ல மொழிபெயர்ப்பாளர்களுக்கு மாற்றாக செயல்படமுடியாது. ஒரு உயர்தர மொழிபெயர்ப்புக்குத் தேவையான ஆக்கச் சிந்தனை, உணர்வுகள் மற்றும் கலாச்சாரப் புரிதல்கள் போன்றவைகள் AI க்குக் கிடையாது. ஒரு குஜராத்தி மொழி கவிதையை அதற்கு இணையான ஆழமான நுண்ணுணர்வுகளையும் அர்த்தத்தையும் வெளிப்படுத்தும் வகையில் AI ஆல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முடியாது. ஒரு சொற்றொடரில் அடங்கியுள்ள நகைச்சுவை, கேலி கிண்டல் மற்றும் அதன் ஆன்மாவை அதனால் புரிந்து கொள்ள முடியாது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்திய மொழிகளிலுள்ள வார்த்தைகள் ஆங்கிலத்தைப் போலல்லாமல் பல அர்த்தங்களை வெளிப்படுத்தக் கூடியவை என்பதைக் கூட அதனால் புரிந்து கொள்ள முடியாது. உதாரணமாக குஜராத்தி மொழியில் તાળ (TAAL- தாள்)என்பது ஒரு வகையான பனை மரம் , ஒரு தட்டு(தாளம்), மகிழ்ச்சி, ஒரு வாய்ப்பு, ஒரு யுக்தி அல்லது ஒரு சதிவேலை.போன்ற பல அர்த்தங்களைக் கொண்டிருக்கும் இதே போலத்தான் ஹிந்தி தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற இதர இந்திய மொழிகளிலும் பல வார்த்தைகள் இருக்கிறது. நான் சொல்ல வருவது என்னவென்றால் நாம் அனைவரும் ஹிந்தியில் நாம் அனைவரு சொல்வோமே “அப்னே சாத் ஜனம் மேய்ன் பி” எபதைத்தான் அதை , AI ஆல் புரிந்து கொள்ளவே முடியாது. எனவே AI தொழில்நுட்பம் மற்றும் AI க்காக வாதாடுபவர்கள் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும்.
அதிகபட்சமாக உங்களுக்கு இயந்திரத்தனமான மிகச் சரியான ஒரு சொற்றொடரை மட்டுமே AI ஆல் வழங்க முடியும். ஆனால் அதில் மொழியின் ஆன்மா இருக்காது. ஒரு தயாரிப்புப் பொருளின் அடிப்படை விவரங்களை அறிந்து கொள்வது போன்ற வழக்கமான செயல்பாடுகளுக்கு அது போதுமானதாக இருக்கலாம். அதிலும் கூட் AI அடிக்கடி மிகப்பெரிய தவறுகளை இழைக்கக் கூடும். எந்த ஒரு அர்த்தமுள்ள தாக்கத்தை விளைவிக்கக் கூடிய உள்ளூர்மயமாக்கல் முயற்சிகளுக்கு மனித சிந்தனையின் ஒரு சாயல் இருக்கவேண்டிய தேவை உங்களுக்கு எப்போதுமே நீடித்து இருக்கும்
AI ஐ ஒரு ஆயத்த ஆடையாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அது பார்க்க தோற்றத்தில் நன்றாக . இருக்கலாம் ஆனால் தனிப்பயனுக்கான தைக்கப்பட்ட ஆடையைப் போல அது கச்சிதமாகப் பொருந்தாது. AI எவ்வளவு சிறப்பாக செயல்படுவதாகத் தோன்றினாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாது, மனித சிந்தனையோடு மொழிபெயர்க்கப்பட்ட துல்லியமான தனித்துவமான உள்ளடக்கங்களுக்கு அது எப்போதுமே ஈடாகாது.
AI எங்கெல்லாம் உதவக்கூடும்
அது அவ்வாறு இருந்தாலும் AI சில பயன்களையும் கொண்டுள்ளது. அது எவ்வாறு உதவக்கூடும் என்பது குறித்து இங்கே காணலாம் :
- நேரத்தை மிச்சப்படுத்த உதவும்: குறிப்புக்களுக்கான விஷயங்களை பல்வேறு மூலாதாரங்களிலிருந்து சேகரித்து ஒரு தொகுப்பாக வழங்குவதன் மூலம் தேடுதலுக்கு செலவிடும் நேரத்தை குறைக்கிறது
- இணைச் சொற்களை வழங்கி மேம்படுத்துகிறது; திரும்பத் திரும்ப ஒரே வார்த்தை பிரயோகத்தை தவிர்க்கு வகையில் ஒரே பொருளைக் கொண்ட பல்வேறு வார்த்தைகளுக்கான தேர்வை வழங்குகிறது.
- எழுத்தில் மாறுபட்ட பாணி: AI உங்களுக்கு பல்வேறு சொற்றொடர்களை வழங்கி வெவ்வேறு தொனிகளில் வார்த்தையை பயன்படுத்தும் வாய்ப்பை உங்களுக்கு வழங்குகிறது.
- உள்ளூர் குழு மொழி மற்றும் வேற்று சொற்றொடர்களை கண்டறிய உதவும்: உடனடியாக நினைவுக்கு வராத சொற்களை கண்டறிய குறிப்பாக நுட்பம் சார்ந்த மற்றும் சிறப்பு பொருளடக்கங்கள் கொண்ட மொழிபெயர்ப்புகளுக்கு உங்களுக்கு அது உதவும்.
- ஆங்கில இலக்கணம் மற்றும் நிறுத்தக் குறிகள் பயன்பாட்டை மேம்படுத்துதல் : ஆங்கில இலக்கணத்தில் காணப்படும் தவறுகளை சரி செய்வதில் AI சிறப்பாக செயல்படுகிறது என்றாலும் சிக்கல் மிகுந்த இந்திய மொழிகள் தொடர்பானவற்றில் திணறுகிறது.
- விரைவான வரைவுகள்: தொடக்க மாதிரி வரைவுகள் அல்லது குறிப்புக்களை உருவாக்க AI பயன்படும் பின்னர் அவற்றை .மனித செயல்பாடுகள் மூலம் சீரமைத்துக் கொள்ள முடியும்
- வழக்கமான பொருளடக்கங்களின் உருவாக்கம்: உற்பத்திப் பொருள் குறித்த விவரங்கள் அல்லது அறிக்கைகள் போன்ற எளிய, நடைமுறைகளுக்கான பொருளடக்கங்களை அதனால் சிறப்பாக கையாள முடியும். என்னைப் பொறுத்த வரையில் AI ஆல் விளையக்கூடிய எந்த ஒரு பெரிய தவறுகள் மற்றும் சட்டபூர்வமான பிர்ச்சினைகளை தவிர்ப்பதற்கு மனித சீர்படுத்தல் தேவைப்படும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன் மற்றும் உறுதியாக நம்புகிறேன் .
- தரவுகளின் நுண்ணறிவு : AI மிகப்பெரிய தரவு தொகுப்புக்களை பகுப்பாய்வு செய்யவும் அதன் சுருக்கம் மற்றும் போக்குகளை வடிவமைத்து உருவாக்கவும் முடியும்
வாடிக்கையாளர்களுக்கு ஒரு செய்தி
வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறு ஆலோசனை: உங்களுக்கு இரண்டு மொழிகள் தெரியும் என்பதால் மட்டுமே உங்களால் ஒரு மொழிபெயர்ப்பாளராக மாறிவிடமுடியாது. . நீங்கள் ஒரு தொழில் நிபுனரை பணிக்கமர்த்தும் போது அவர்களுக்கிருக்கும் நிபுணத்துவத்தின் மீது நம்பிக்கை வையுங்கள். திருத்தங்களை மேற்கொள்ள அல்லது விளக்கங்களை கேட்பது போன்றவை அவசியமான ஒன்றுதான் என்றாலும், எந்த ஒரு வலுவான ஆதாரமும் இல்லாமல் AI குறித்த குற்றச் சாட்டுக்களை அனாவசியமாக ஒரு போதும் கூறாதீர்கள்.
உள்ளூர் மயமாக்கலின் நிபுணர்களை மதித்து நடந்து கொள்ளுங்கள். ஒரு ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளர் வார்த்தைகளை மட்டுமே மொழிபெயர்ப்பதில்லை. அந்த மொழியில் அடங்கியுள்ள பொருள், தொனி மற்றும் கலாச்சாரத்தை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். அசல் மொழி வெளிப்படுத்தியதை போலவே அந்த செய்தி குறியிலக்கு மொழியிலும் ஒத்திசைந்து ஒலிப்பதை அவர்கள் உறுதி செய்கிறார்கள். அதை வேறு எந்த ஒரு AI ஆலும் செய்ய முடியாது- குறைந்த பட்சமாக இன்றைய சூழலில் அது முடியவே முடியாது.
முன் மொழிபெயர்ப்பு குறித்த வாடிக்கையாளர்களின் தவறான அணுகுமுறை
பெரும்பாலான வாடிக்கையாளர்கள், பொருளடக்கத்தை தங்களுக்குத் தேவையான மொழியில் முன்னதாகவே மொழிமாற்றம் செய்து அதை மொழிபெயர்ப்பாளருடன் பகிர்ந்து கொண்டு , “உங்கள் வேலையில் பகுதியை நாங்கள் நிறைவேற்றிவிட்டோம், இப்போது தேவைப்படும் இடங்களில் அதை சரி செய்து எங்களுக்கு வழங்குங்கள்” என்று அறிவுறுத்தும் இந்தப் பழக்கத்தை அதிகளவில் கடைப்பிடித்து வருகிறார்கள். உண்மையில் இந்த தந்திரக்காரர்கள் கூறவருவது என்னவென்றால், “ பாருங்கள் இங்கேயும் அங்கேயும் சில பட்டன்களை அழுத்தி எங்களால் உங்களை மட்டம் தட்ட முடியும் , உங்கள் கட்டணத்தை குறைக்கவும் மற்றும் எங்களுக்கும் மொழிபெயர்க்கத் தெரியும் என்பதை உங்களுக்கு உணர்த்த முடியும்” என்பதுதான். இதை செய்யக்கூடாது என்பதை தயவு செய்து , தயவு செய்து உணருங்கள். இதில் உண்மை என்னவென்றால், ஏற்கனவே மொழிமாற்றம் செய்யப்பட்ட பொருளடக்கத்தின் ஒவ்வொரு வார்த்தைகளையும் இரு மொழிகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கும் அலுப்பூட்டும் சிக்கலான வேலையை மேற்கொண்டு வழங்குவதை விட ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு அதை நேரடியாக விருப்பமான ஒரு மொழிக்கு மொழிபெயர்ப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் பயனுள்ள அனுபவமுமாக அமையும். என் மீது நம்பிக்கை இல்லைஎன்றால் அதை நீங்களே முயற்சித்துப் பாருங்கள். அப்போதுதான் அது எவ்வளவு கடினமான மற்றும் மன அழுத்தத்தை ஏற்ப்படுத்தும் ஒரு அனுபவம் என்பது உங்களுக்குத் தெரியவரும்.!
முடிவுரை: நடைமுறைகளை மாற்றியமைக்கவேண்டிய தருணம் இது.
உலகமயமாக்கப்பட்டுவரும் இன்றைய உலகின் அறியப்படாத அங்கீகரிக்கப்படாத ஹீரோக்கள் நமது உள்ளூர்மயமாக்கலின் தொழில் நிபுணர்கள். AI என்பது என்ன ? அது வெறும் ஒரு கருவி. ஆக்கச் சிந்தனை மற்றும் உள்ளுணர்வு நிறைந்த ஒரு மனித மூளை செயல்படும்போது அற்புதங்கள் நிகழ்கின்றன. AI அனைத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டு .புரட்சியை ஏற்ப்படுத்தலாம், ஆனால் ஒரு அர்த்தமுள்ள , காலாச்சார ரீதியாக செழுமையான உள்ளூர்மயமாக்கல் செயல்பாடுகளை தொடர்ந்து நிறைவேறச் செய்வதற்கான ஆற்றல் மனிதர்களுக்கு மட்டுமே இருக்கிறது.
ஆகவே, உங்களுக்கான அனைத்து உள்ளூர்மயமாக்கல் செயல்பாடுகளையும் AI மூலம் நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளும் முன்பாக ஒரு கணம் நின்று நிதானித்து பாருங்கள். பணியில் அடங்கியுள்ள சிக்கல்களை கருத்தில் கொள்ளுங்கள் மற்றும் உங்கள் செய்திகளுக்கு உயிரூட்டும் மொழிபெயர்ப்பாளர்களை மதியுங்கள்.
குறிப்பு: இந்த நடைமுறை முழுவதுமாக AI இன் உதவியை நான் நாடினேன் ஆனால் இங்கு வழங்கப்பட்டிருக்கும் அனைத்தும் என் எண்ணங்கள் மற்றும் மதியூகத்தில் விளைந்தவை. என் கண்ணோட்டத்தை மேலும் சிறப்பாக சீரமைத்துக்கொள்ளவும் இதன் இறுதி வெளிப்பாட்டை வடிவமைக்கவும் நமது இந்த கலந்தாலோசனை, எனக்கு பெருமளவில் உதவியது. மனித அறிவு சார்ந்த ஆக்கச் சிந்தனையை மேம்படுத்த இத்தகைய கூட்டாண்மை அணுகுமுறையில்தான் AI ஐ செயல்திறன் மிக்க வகையில் பயன்படுத்திக் கொள்ள முடியுமே தவிர அதை ஒரு மாற்றுக் கருவியாக பயன்படுத்த முடியாது. இத்தகைய ஆக்கபூர்வமான பணிகளுக்கு AI மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கும் அதே வேளையில், பல்வேறு மொழிகளில் பயன்படத்தக்க மொழிபெயர்ப்புக்களை மேற்கொள்வதற்கான ஆற்றலை அது கொண்டிருக்கவில்லை.
உங்கள் கருத்துக்களை கீழே பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுமாறு உங்களை அழைக்கிறேன்.. இந்த முக்கியமான தலைப்பு குறித்து உங்கள் எண்ணங்களை அறிந்து கொள்ள நான் ஆவலோடு காத்திருக்கிறேன்.!
(இதன் ஆசிரியர் ஒரு பத்திரிக்கையாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் 40 க்கும் அதிகமான இந்தியா மற்றும் உலகளாவிய முன்னணி மொழிகளில் ஊடக சேவை வழங்கும் மும்பையில் அமைந்துள்ள நிறுவனமான மேங்ரோல் மல்டி மீடியா லிமிட்டட் இன் தலைமை மேலாண்மை இயக்குனர் ஆவார்)
The insights provided are not only thought-provoking but also relevant to today’s issues related to translators in India.